மேலும் செய்திகள்
2 வீடுகளில் 13 சவரன் நகை கொள்ளை
11-Oct-2024
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அசோக்குமார், 32; போட்டோகிராபர்.இவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் 8,500 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீ சார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.
11-Oct-2024