உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மிளகாய் பயிரை காப்பீடு செய்ய தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்

மிளகாய் பயிரை காப்பீடு செய்ய தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்

அவலுார்பேட்டை : மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேல்மலையனுார் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பிரியா செய்திக்குறிப்பு:மேல்மலையனுார் தாலுகாவில் ராபி பருவத்தில் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் இம்மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்து பயிர் பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.உழவன் செயலியில் விவசாயி செலுத்த வேண்டிய பிரீமிய தொகை விபரத்தை அறிந்து கொள்ளலாம்.உழவன் செயலி பொது சேவை மையம் (சி.எஸ்.சி.,) கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயி பதிவு படிவம், வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை ஜெராக்ஸ், சிட்டா, நடப்பு பருவ அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், தகவல்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி