உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு 

விக்கிரவாண்டி : வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், கணபதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 31; இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 31 ம் தேதி, தனது குடும்பத்தை பெங்களூரு அழைத்து சென்றார். இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டின் பீரோவில் இருந்த, பத்தரை சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !