தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மனமுடைந்த கணவர் தற்கொலை
வானுார் : வானுார் அருகே மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் அடுத்த திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 31; டிரைவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாததால் கணவன் - மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இந்துமதி, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.