கணவர் மாயம் மனைவி புகார்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தங்கை வீட்டிற்கு சென்ற கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார். கண்டாச்சிபுரம் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சத்தியராஜ், 37; சற்று மனநலம் பாதித்த இவர், சென்னையில் கட்டட பணி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தவர், காணை கிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவது மனைவி சுகந்தி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்