உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை

கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை

விழுப்புரம்,: விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு பணிகள் குறித்து, காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட டி.எஸ்.பி.,க்கள், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் முன்னிலை வகித்தனர். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு, ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும், மனித உரிமைகள் மீறல்கள், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், எஸ்.சி., -எஸ்.டி., வன்கொடுமை குறித்து பதியப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரணம் ஆகியவை குறித்து விசாரித்தார். மாவட்டங்களில், கொத்தடிமை பணியாளர் முறை இருந்தால், அதனை கண்டறிந்து, அவர்களை மீட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !