மேலும் செய்திகள்
புதிய அங்கன்வாடி திறப்பு விழா
28-Oct-2024
திண்டிவனம்: திண்டிவனம், முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.இப்பள்ளியில், நபார்டு திட்டத்தில் 1.27 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை நேற்று காலை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.தலைமையாசிரியை சித்ரா, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ரேணுகா, முன்னாள் கவுன்சிலர் நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர். அவலுார்பேட்டை
தேவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 84.72 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வகுப்பறையில், மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய சேர்மன் கண்மணி, ஊராட்சி தலைவர் சாந்தி சக்திவேல், பி.டி.ஏ., தலைவர் சீனிவாசன், மேலாண்மை குழுதலைவர் மேகஸ்வரி முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். வானுார்
கிளியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2 கோடியே 13 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வகுப்பறையில், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் உஷா முரளி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தலைமையாசிரியர் நாகமணி, உதவி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்றனர்.ஒன்றிய துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு, ஊராட்சி தலைவர் நாகம்மாள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
28-Oct-2024