வானுார் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு
வானுார்; திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ரூ. 3.62 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வானூர் பி.டி.ஓ., அலுவலகக்கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக வானுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.இதையொட்டி, புதிய அலுவலக கட்டடத்தில், எம்.எல்.ஏ., சக்ரபாணி, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், ஒன்றிய சேர்மன் உஷா முரளி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமா குப்புசாமி, அன்புமணி, கவுதம், ஒன்றிய துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, மைதிலி ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தனபால், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், வசந்தி கபாலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், தி.மு.க., மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.