உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

விழுப்புரம் : மாவட்டத்தில், இந்தாண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில், விழுப்புரம் கலெக் டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு, விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. மைதானத்தில் மண் கொட்டி சீரமைக்கும் பணிகளும், தூய்மை பணிகளும், விழா பந்தல் அமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 'அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட விளையாட்டு மைதானங்களில் தான் விழா நடக்கிறது. நம் மாவட்டத்திலும் இனி அப்படியே நடத்தப்பட உள்ளது. இதனால், படிப்படியாக மைதானமும் தரம் உயர வாய்ப்பு ஏற்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ