ஆரோவில்லில் சுதந்திர தின விழா
வானுார்: ஆரோவில்லில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அறக்கட்டளை வளாகம் மற்றும் பாரத் நிவாசில், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். சிறப்பு அலுவலர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக காணொலி மூலம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், 'அரவிந்தர், சுதந்திரத்தை ஒரு போராட்டத்தின் முடிவாக பார்க்கவில்லை. ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இந்தியா தனது ஆன்மிக ஞானத்தால் உலகை வழி நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் 2047 விகசித் பாரத் திட்டமானது, அரவிந்தரின் கனவுடன் பொருந்துகிறது. கல்வி என்பது மனதில் தகவல்களை நிரப்புவது அல்ல. ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் மறைந்த சக்தியை வெளிக்கொணர்வது' என் றார். விழாவையொட்டி, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.