உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

செஞ்சி,; செஞ்சி பேரூராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை தாங்கிய மஸ்தான் எம்.எல்.ஏ., தேசியகொடியேற்றினார். பேரூராட்சி சேர்மன் மொத்தியார் அலி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார். பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி மற்றும் கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் விஜயகுமார் தேசிய கொடியேற்றினார். பி.டி.ஓ., பிரபாசங்கர், துணை சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். செஞ்சி கூட்ரோட்டில் நகர காங்., சார்பில் நகர தலைவர் சூர்யமூர்த்தி கொடியேற்றினார். நிர்வாகிகள் சீனிவாசன், ராஜா, டாக்டர் ராஜா முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். செஞ்சி வட்டார காங்., சார்பில் திருவண்ணாமலை ரோடு ஸ்டேட் பேங்க் எதிரில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் சக்திவேல் கொடியேற்றினார். நிர்வாகிகள் ஜோலாதாஸ், சையத் மாலிக், பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி முன்னிலை வகித்தனர். வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி, இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி, மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார். கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.,., பள்ளி முதல்வர் ராபியா தொகுத்து வழங்கினார். கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், முருகதாஸ், சசிகுமார், செந்தில்குமார், விஜயகுமார், மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் தனலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். திண்டிவனம் மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கென்னடி கல்விக்குழும தலைவர் சண்முகம் தலைமையில் பள்ளி முதல்வர் சந்தோஷ், பள்ளி வளாகத்தில் தேசிய கொடியேற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தது. கடந்தாண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். வானுார் கிளியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினர் சக்கரபாணி எம்.எல்.ஏ.,தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியை தாட்சாயிணி தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். தனலட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் ராமமூர்த்தி, உறுப்பினர் சுமதி, அறம்வெல்லும் மக்கள் இயக்க உறுப்பினர் சின்னமணி பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் முத்துக்குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் கோவிந்தராசு நன்றி கூறினார். மயிலம் கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சேகர் முன்னிலை வகித்தார். மாணவி மவுனிகா வரவேற்றார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் தம்பி, பவுடா நிதி நிறுவன தலைமை அலுவலர் பாலாஜி ரங்கராஜன் தேசியக்கொடி ஏற்றினார். பவுடா கல்விக் குழுமை இயக்குநர் பழனி வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லுாரியில் மயிலம் 20 ஆம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்று, கல்லுாரி வளாகத்தில் தேசியக் கொடியேற்றினார். கல்லுாரி துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ