இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் அறக்கட்டளையில் ஆலோசனை
ஆரோவில் : இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள், ஆரோவில் அறக்கட்டளையில் நிதி வங்கி தீர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில், மண்டல முதன்மை மேலாளர் மணிராஜ், கிளை மேலாளர் விவேக் ஹசாரி ஆகியோர் ஆரோவில் அறக்கட்டளையின் செயல்துறை அதிகாரி சீதாராமனை சந்தித்து பேசினர்.சந்திப்பில், இந்தியன் வங்கி, ஆரோவில் அறக்கட்டளையின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பின்டெக் தனிப்பயன் வங்கி மாதிரியை முன் மொழிந்தனர். அறக்கட்டளை ஊழியர்களுக்கான சம்பள தொகுப்பு, முழுமையான மற்றும் மதிப்பு கூட்டிய வங்கி சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொழில் குழுக்கள் ஆகியவற்றின் நிதி மேம்பாடு குறித்தும் விரிவான விவாதங்கள் நடந்தது. உயிரியல் மண்டலம் மற்றும் ஆரோவிலில் செயல்படும் கைவினைத் தொழில்கள், சிறுதொழில் அலகுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.