வானுாரில் தொழில்நுட்பக் கல்லுாரி இந்திய கம்யூ., வலியுறுத்தல்
வானுார் : வானுார் வட்டாரத்தில் தொழிற்நுட்பக்கல்லுாரி ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய கம்யூ., வானுார் வட்ட கிளையின் 24வது மாநாடு, கிளியனுாரில் நடந்தது. வட்ட செயலாளர் தனுசு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு சகாபுதீன் கட்சி கொடியேற்றி வைத்து துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட நிர்வாகக்குழு ராமச்சந்திரன், மாவட்ட குழு மாசிலாமணி, சபாபதி வாழ்த்தி பேசினர்.மாநாட்டில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நுாறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், வானுார் வட்டாரத்தில் தொழிற்நுட்பக் கல்லுாரி ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி குளம், குட்டை, ஏரி கால்வாய்களை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். கோட்டக்குப்பத்தில் மின் பற்றாக்குறையை போக்க துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.