உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

விழுப்புரம், ; விழுப்புரத்தில், இந்திய மாணவர் சங்க 17வது மாவட்ட மாநாடு நடந்தது. சி.ஐ.டி.யூ., அலுவலகத்தில் நடந்த மாநாட்டிற்கு, மாவட்ட துணைத் தலைவர் சுபித்ரா தலைமை தாங்கினார். மத்தியகுழு உறுப்பினர் சவுமியா தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பிரகாஷ் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலைவர் தமிழ் பாரதி நிறைவுறையாற்றினார். மாணவர் சங்க நிர்வாகிகள் மதுமிதா, அஜய், உதயா உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், 15 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளராக ஜீவானந்தமும், தலைவராக சுபித்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், மரக்காணம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ