உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புத்தாக்க பயிற்சி முகாம்

புத்தாக்க பயிற்சி முகாம்

செஞ்சி : செஞ்சியில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். சத்துணவு மேலாளர் குமார் வரவேற்றார். எம்.எல்.ஏ மஸ்தான் சிறப்புரை நிகழ்த்தி, முகாமை துவக்கி வைத்தார்.பி.டி.ஓ., க்கள் நடராஜன், சீதாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், மேலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் 100க்கும் மேற்பட்ட சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். சத்துணவில் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிப்பது, புதிய வகை உணவு தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ