உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் காயம்

கார் மோதிய விபத்தில் இன்ஸ்பெக்டர் காயம்

மயிலம்: மயிலம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார், 58; தமிழ்நாடு சிறப்பு காவல் படை இன்ஸ்பெக்டர். இவர் பழவேற்காடு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார்பாளையம் வரை ரோந்து பணியில் ஈடுபட்டு வருபவர்.நேற்று முன்தினம் 25ம் தேதி இரவு தனது பணியை முடித்துக் கொண்டு, இரவு 9:00 மணிக்கு கூட்டேரிப்பட்டில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள கன்னிகா புரத்திற்கு பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவருக்கு பின்னால் விழுப்புரம் மார்க்கத்திலிருந்து வந்த அடையாளம் தெரியாத கார் இன்ஸ்பெக்டர் குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுது. படு காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ