உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய மின் விளக்குகள் இயக்கி வைப்பு

புதிய மின் விளக்குகள் இயக்கி வைப்பு

கோட்டக்குப்பம்: இ.சி.ஆரில்., ரூ.18 லட்சம் மதிப்பில், புதிய மின் விளக்குகளை நகர்மன்ற தலைவர் இயக்கி வைத்தார். கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட இ.சி.ஆரில், ரவுன்டானா முதல் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்திப்பு வரை விடுபட்டு இருந்த பகுதியில், 18 புதிய மின் கம்பங்களில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் இ.சி.ஆரில்., நடந்தது. கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு மின் விளக்குகளை இயக்கி துவக்கி வைத்து பேசினார். நகராட்சி பொது பணி மேற்பார்வையாளர் ஆரோக்கியம், கவுன்சிலர்கள் வஹிதா பானூ, ஜாக்கிர் உசேன், நாசர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை