உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு

தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு

விழுப்புரம்: திண்டிவனம் ஓங்கூர் தட்சசீலா பல்கலையில், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறைகள் சார்பில், 'பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் வளர்ந்து வரும் போக்குகள்' தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், டாக்டர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். மேலாண்மை புல தலைவர் குரு வரவேற்றார். பல்கலை துணை வேந்தர் விவேக் இந்தர் கோச்சர், பதிவாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயக்குநர் விவேகானந்தன், எதிர்கால வாழ்க்கையை வடிவமைப்பதில் உள்ள சிக்கல்கள், பொறுப்புகள், தற்போதைய நிலையில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறை வேலைவாய்ப்புகள் குறித்து கூறினார். பல கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், பேராசிரியர்களின் 102 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு வெளியிடப்பட்டது. 2ம் நாள் அமர்வில் பல கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். இதில் சிறந்த கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இணை பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்பிரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, கலை அறிவியல் துறை டீன் தீபா, அங்கீகாரங்களின் புல முதன்மையர் சீதாராமன் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் துறை பேராசிரியர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை