உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

திண்டிவனம் :திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் நடந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது பாரூக் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் கோவிந்தசாமி, டாக்டர் பரமேஸ்வரி, யுவராஜ் ஆகியோர் யோகாவின் அவசியம் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். வழக்கறிஞர் நலச்சங்க செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தகுமார் உள்பட மொத்தம் 9 நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில், பார் அசோசியேஷன் செயலர் பாபு, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தயாளன், மூத்த வழக்கறிஞர்கள் சண்முகம் , ஏழுமலை, அஜ்மல் அலி மற்றும் நீதிமன்ற சிப்பந்திகள் திரளாக கலந்து கொண்டனர். மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி ராஜமகேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை