உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நியமன கவுன்சிலர் ஆணை மாற்றுத்திறனாளிக்கு வழங்கல்

நியமன கவுன்சிலர் ஆணை மாற்றுத்திறனாளிக்கு வழங்கல்

செஞ்சி: செஞ்சி ஒன்றிய குழுவில் புதிதாக கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத்திறனாளி ஒருவரை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி செஞ்சி ஒன்றிய குழுவில் பாடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியை கவுன்சிலராக கலெக்டர் ஷேக் அப்துல் ரஹமான் நியமித்துள்ளார் இந்த நியமன அணையை நாகராஜிடம் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வழங்கினார். பி.டி.ஓ., நடராஜன், ஏ.பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ