பணி ஆணை வழங்கல்
செஞ்சி செஞ்சி ஒன்றியம் ஒதியத்துார், கவரை, தச்சம்பட்டு, தாண்டவசமுத்திரம், நல்லான்பிள்ளை பெற்றாள், பொன்னங்குப்பம், ஜம்போதி ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு மறு கட்டுமான திட்டத்தில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செஞ்சி சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏ.பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், 27 லட்சத்து 2 ஆயிரத்து, 400 ரூபாய் மதிப்பீட்டில் 10 நபர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை வழங்கி பேசினார். இதில் மண்டல பி.டி.ஓ.,க்கள் அபிராமி, ராமதாஸ், பர்குணன், ஊராட்சி தலைவர்கள் ரவி, அய்யனார், ஹரி, குமரவேல், நந்தகோபால கிருஷ்ணன், தேவகடாட்சம் ஒன்றிய நிர்வாகிகள் வாசு, செந்தில் மற்றும் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.