ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் 14வது முறை சாம்பியன் ஷிப்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், திருவண்ணாமலையில் நடந்தது. இதில் விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள், ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், கோல் ஊன்றி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் அதிகளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களைப் வென்றனர். இப்பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றனர். இப்பள்ளி 14வது முறையாக இக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. கோப்பை வென்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.