உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புலியனுார் கிராமத்தை சேர்ந்த மல்லிகா, 60; நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மேல்மலையனுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.மாலை 4:00மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து, பீரோவில் வைத்திருந்த மூன்றரை சவரன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.வெள்ளிமேடுப்பேட்டை போலீசில் மல்லிகா அளித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ