உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளியை கடத்தி தாக்கிய நகை கடை உரிமையாளர்கள் கைது

தொழிலாளியை கடத்தி தாக்கிய நகை கடை உரிமையாளர்கள் கைது

விழுப்புரம் : நகை காணாமல் போனதால், தொழிலாளியை கடத்தி அடைத்து வைத்து தாக்கிய கடை உரிமையாளர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34; பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36; இவர்களுக்கு சொந்தமான நகை கடையில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கலையரசன், 35; என்பவர் நகை செய்யும் வேலை செய்து வருகிறார்.கடையில் 3 கிராம் தங்கம் காணாமல் போனதால், அதை கலையரசன்தான் எடுத்தார் என கடந்த 15ம் தேதி அவரை கடத்திச் சென்று பிரகாஷ் வீட்டு மாடி அறையில் அடைத்து வைத்து தாக்கினர்.இதையடுத்து, 17ம் தேதி கடையில் தேடியபோது, பிரகாஷ் டேபிள் பிரோவில் நகை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள், கலையரசனை விடுவித்தனர்.புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை