உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துாரைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி மலர்விழி, 44; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை அவரது வீட்டை பூட்டிவிட்டு, பிள்ளையார்குப்பத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், திருநாவலுார், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !