உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அம்மன் கோவிலில் நகை திருட்டு

அம்மன் கோவிலில் நகை திருட்டு

விழுப்புரம்: காணை அருகே கோவில் பூட்டை உடைத்து, அம்மன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காணை அடுத்த அழகம்மா கோவிலில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, பூசாரி வீரமணி பூஜை முடித்து கதவை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது, கோவில் முன் பகுதி கிரீல் கேட் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி பொட்டு, உண்டியல் காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.காணை போலீசார் வழக்குப் பதிந்து, கோவிலில் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை