உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை

பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் உள்ளே இருந்த 10 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மேற்கு சண்முகபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 66; இவர், கடந்த 17ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உள்ளே அறையில் கபோர்டில் ஒரு பையில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மட்டும் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி