உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

செஞ்சி : செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவிலில் சித்திரை தேர்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும் பூங்கரகம் மற்றும் வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா மற்றும் அன்னதானம் நடந்தது. 9ம் நாள் விழாவாக நேற்று காலை மாரியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து கோவிலில் ஊரணி பொங்கலும், சாகை வார்த்தலும் 12:00 மணிக்கு ராஜகிரி கோட்டை ராஜகாளியம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடும் நடந்தது.ராஜகாளியம்மன் திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா மாரியம்மன், திரிசூலத்தை 41 அடி உயரமுள்ள தேரில் ஏற்றினர். முன்னதாக பாரம்பரிய முறைப்படி ராஜாகிரி கோட்டை உள்ளேயும், பீரங்கிமேடு மந்தை வெளியிலும் எருமை கிடாக்களை வெட்டி பலிகொடுத்தனர். மாலை 4:00 மணிக்கு வடம் பிடித்தல் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். மேலும், தானியம், காய்கனிகள், நாணயத்தை தேர் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார், ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை