உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கனியாமூர் பள்ளி கலவர வழக்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

விழுப்புரம் : கனியாமூர் பள்ளி கலவர வழக்கில், 26 சிறுவர்களுக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி,17;கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுதொர்பாக 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறி, பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.பள்ளியில் நடந்த கலவர வழக்கு குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வு போலீசார், 916 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், 53 சிறுவர்கள் மீதான இறுதி அறிக்கையை, விழுப்புரம் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 53 சிறுவர்களில், 26 பேர் ஆஜராகினர். 27 பேர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஜரான 26 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்த, வழக்கு விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி சந்திரகாசபூபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை