மேலும் செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
12-Aug-2025
அவலுார்பேட்டை,: அவலுார்பேட்டையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4:30, மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7:15 மணிக்கு சிறப்பு கூட்டு வழிபாடு, அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம், சக்தி கொடி ஏற்றினார். ஆன்மிக இயக்க முன்னாள் மாவட்ட செயலாளர் பரத்குமார் கஞ்சி கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தார். திரளான செவ்வாடை பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி, கஞ்சி கலயங்களுடன் ஊர்வலம் சென்றனர். மணியரசன், ராணி, மாலதி, மகேஸ்வரி, பொன்னி, வெங்கடேசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Aug-2025