உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கருணாநிதி பிறந்த நாள் விழா

கருணாநிதி பிறந்த நாள் விழா

திண்டிவனம்; திண்டிவனம் உழவர் சந்தையில் தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தொண்டரணி பிர்லாசெல்வம், கவுன்சிலர் சுதா முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, உழவர்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் ஆடிட்டர் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் கபிலன் பங்கேற்றனர்.இதே போன்று, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், ஊரல் கிராமத்தில் நடந்த விழாவில், ஆரணி தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை கருணாநிதி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் 100 பேருக்கு புடவை வழங்கினார். கிளைச் செயலாளர்கள் முருகன், சேகர், முன்னாள் கிளைச் செயலாளர். ஏகாம்பரம், தனசேகர், நிர்வாகிகள் மூர்த்தி, இளவரசன், ராஜிவ்காந்தி பங்கேற்றனர்.

விழுப்புரம்

காணை கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார். இதில், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.நிர்வாகிகள் பழனி, செல்வம், நாராயணசாமி, சக்கரவர்த்தி, கருணாகரன், மதன், புனிதா, அய்யனார், சிவராமன், அரசு வழக்கறிஞர் கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.கோலியனுார் மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில், முத்தாம்பாளையத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.கோலியனுார் ஒன்றிய துணைச் சேர்மன் உதயகுமார், துணைச் செயலாளர்கள் பட்டு ஆறுமுகம், ஞானவேல், ஜெயா பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.கிளைச் செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர்கள் சத்தியா ராஜேந்திரன், தனசேகரன், துணைத் தலைவர் அஞ்சுகம், பிரதிநிதி ராமாஜெயம், சதீஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ