உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிளியனுார் கூத்தாண்டவர் கோவில்  தேர் திருவிழா

கிளியனுார் கூத்தாண்டவர் கோவில்  தேர் திருவிழா

வானுார், : கிளியனுார் கூத்தாண்டவர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது.விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பக்காசூரனை சம்ஹாரம் செய்தல், அம்மனுக்கு திருக்கல்யாணம், அரவான் களபலி, தீமிதி திருவிழா, கூத்தாண்டவர் சுவாமிக்கு மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் கூத்தாண்டவர் கோவில் திருத்தேர் வீதியுலா நடந்தது.விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ., தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை