உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடலிபுதுார் கோவில் நாளை கும்பாபிஷேகம்

கடலிபுதுார் கோவில் நாளை கும்பாபிஷேகம்

செஞ்சி, : செஞ்சி அடுத்த கடலிபுதுார் முகமாரியம்மன் கோவிலில் திருப்பணி முடிந்து நாளை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.அதனையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, மகாலட்சுமி, சுதர்சன, லட்சுமி ஹோமமும், 11:45 மணிக்கு பூர்ணாஹூதியும், மாலை 6:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையும் நடக்கிறது.நாளை காலை 7:30 மணிக்கு ஆனைமுகன், யாகசாலை வழிபாடு, 108 திரவிய மந்திர பாராயணம், மூல மந்திர ஜபமும், 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை