குறுவை சிறப்பு தொகுப்புகள்: வேளாண்மை துறை அழைப்பு
விழுப்புரம்; ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதாக, வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக வேளாண்மை துறை சார்பில், நடப்பு நிதியாண்டில் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கும் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவிற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. சான்று நெல் விதைகள் ( ஒரு கிலோவிற்கு ரூ.20 மானியம்), நெல் நுண்ணுாட்டக் கலவை ( ஒரு ஏக்கருக்கு ரூ.147.60 மானியம்), உயிர் உரங்கள் ( ஒரு ஏக்கருக்கு ரூ.60 மானியம்) ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மட்டும், இத்திட்டத்தின் கீழ் ரூ.1.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்தும், வேளாண்மை விரிவக்க மையங்களை அணுகியும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.