கூலி தொழிலாளி தற்கொலை
கோட்டக்குப்பம் : கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டக்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குமார், 44; இவரது மனைவி கஸ்துாரி. கூலித்தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களாக சின்ன முதலியார்சாவடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது மூத்த மகள் திருமணம் முடிந்து கணவருடன் வாழாமல் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் குமார் சோகத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.