உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

திருவெண்ணெய்நல்லூர்: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலியானார். திருவெண்ணய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் நீரில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆற்றில் நீரில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆற்றில் இறந்து கிடந்தவர் எரளூர் கிராமத்தைச் சார்ந்த குப்பன் மகன் தேவேந்திரன், 40; கூலித் தொழிலாளி என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து தேவேந்திரன் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ