உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரி மதகு மறு கட்டுமானப்பணி

ஏரி மதகு மறு கட்டுமானப்பணி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் ஏரி மதகு மறு கட்டுமானப் பணி நடக்கிறது.கப்பியாம்புலியூரில் 247ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 232.27 எக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கடந்த பெஞ்சல் புயலின் போது, இந்த ஏரியின் கரை மற்றும் மதகு சேதமடைந்திருந்ததால் பொதுப் பணித்துறையின் மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரி கரைகள் சீரமைத்தும், மதகு மறு கட்டமைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கட்டுமான பணிகளை செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி