மேலும் செய்திகள்
நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி
21-Dec-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரி தென்மேற்கு பகுதியில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்ட புனரமைப்பு பணிகளை, கலெக்டர் துவக்கி வைத்தார். முத்தாம்பாளையம் ஏரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், 127.26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முத்தாம்பாளையம் ஏரியை துார்வாரி, 1.5 கி.மீ., நீளம் கரைகளை பலப்படுத்தி, கரைகளை சுற்றி மரக்கன்று நட்டு பராமரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் முத்தாம்பாளையம் ஏரி தென்மேற்கு பகுதியில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, தன்னார்வலர்கள் இணைந்து 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை நீக்கி, கரைகளை பலப்படுத்தி புனரமைப்பதற்கான பணிகள் துவங்கியது. இந்த பணிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். மேலும், இங்கு, கரைகளை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட திட்டமிட்டுள்ளது. இதில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கார்த்தி உட்பட தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
21-Dec-2025