அஞ்சல் தொழில்நுட்ப சேவை துவக்கம்
விழுப்புரம்; விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது. துணை கோட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் யுவராஜ் தலைமை தாங்கி, மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை யை குத்துவிளக்கேற்றி, முதல் சேவையை துவக்கி வைத்து பேசினார். தலைமை அஞ்சல் அதிகாரி சாதிக்பாஷா, துணை அஞ்சல் அதிகாரிகள் வாசு, துரைசாமி, சேகர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், அஞ்சலகத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.