உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர்கள் டோல்கேட் முற்றுகை செஞ்சி அருகே பரபரப்பு

வழக்கறிஞர்கள் டோல்கேட் முற்றுகை செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள டோல் கேட்டில் வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.செஞ்சி - திண்டிவனம் இடையே நங்கிலிகொண்டான் கிராம எல்லையில் டோல் கேட் உள்ளது. இந்த டோல் கேட்டில் உள்ளூர் வழக்கறிஞர்கள் வாடகை வாகனங்களில் சென்ற போது கட்டணம் வசூலித்து வந்தனர். இதனால் இருதரப்பிற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று காலை 11:30 மணியளவில் பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் டோல் கேட்டை முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து வந்த செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கறிஞர்களுடன் சமாதானம் பேசினர். டோல் கேட் நிர்வாகத்தினர் உள்ளூர் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து சென்று வருவதற்கு ஓப்புக் கொண்டனர். இதையடுத்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை