உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தது.அதன்படி, விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர் நேற்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நேற்று ஒருநாள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். போராட்டத்தில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது தொடர்வதால், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ