மேலும் செய்திகள்
சிறுமி மாயம் போலீஸ் விசாரணை
20-Sep-2026
விழுப்புரம்: வளவனுார் அருகே பூச்சி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வளவனுார் அருகே நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முருகன்,41; இவர் நீண்ட நாட்களாக பல் வலியால் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 14ம் தேதி தனது சகோதரி வீட்டில் கலைக்கொல்லி பூச்சிமருந்தை குடித்துள்ளார். உடனே அவரை குடும்பத்தார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Sep-2026