உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., கல்லுாரியில் உயிர்காப்பு பயிற்சி

இ.எஸ்., கல்லுாரியில் உயிர்காப்பு பயிற்சி

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கல்லுாரியில் உயிர் காப்பு செயல்முறை பயிற்சி நடந்தது.இ.எஸ்., கல்லுாரியின் தரம் மேம்பாட்டு குழு உறுப்பினர் மற்றும் கேரளாவின் இந்திய அவசர மருத்துவ சேவை நிறுவனம் சார்பில் உயிர் காப்பு பயிற்சி நடந்தது. இதில், 158 பேர் கலந்து கொண்டனர்.பயிற்சியில் உயிர் காப்பு பயிற்சி பற்றிய கொள்கைகள், நோக்கம், உயிர் காப்பு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை அறிகுறிகள், தொழில்நுட்ப விளக்கம் கூறப்பட்டது. தொடர்ந்து பயிற்சி குழுவினர் மூலம் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.பின், மாணவர்கள் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டு, செய்முறை பயிற்சியாளர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை