மேலும் செய்திகள்
புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
03-Mar-2025
விழுப்புரம்; விழுப்புரம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த சுமோ காரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில மது பாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் காரில் வந்தவர்கள் விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (எ) ஆதிமூலம், 28; தங்கதுரை மனைவி தீபா, 35; என தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து, 90 மில்லி கொண்ட 960 மதுபாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
03-Mar-2025