உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.10.14 கோடி மானியத்தில் இயந்திரங்கள் வினியோகம்: இந்தாண்டு 755 விவசாயிகளுக்கு வழங்கல்

ரூ.10.14 கோடி மானியத்தில் இயந்திரங்கள் வினியோகம்: இந்தாண்டு 755 விவசாயிகளுக்கு வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 755 விவசாயிகளுக்கு, வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.10.14 கோடி மதிப்பில் மானிய விலையில், வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து, விவசாயகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வேளாண் பணிகளை எளிமையாக்கவும், ஆள் பற்றாக்குறையை தவிர்க்க, விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் சிரமம் இன்றி, விரைவாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள மானிய விலையில் டிராக்டர், பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவி, சுழல் கலப்பை, பல தானியங்கள் அடிக்கும் கருவி, நெல் வைக்கோல் சுற்றும் கருவி, நெல் நடவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்களை, மானிய விலையில் வழங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத் தில், இந்த 2024-25 நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், ஏராளமான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.வேளாண் பொறியியல் செயற் பொறியாளர் சுமதி கூறியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு மானிய திட்டங்கள் விரைவாக வழங்கப்பட்டுள்ளது. காணை வட்டாரத்தில் 77 விவசாயிகளுக்கு ரூ.86.08 லட்சம் மானியத்திலும், கோலியனூர் வட்டாரத்தில், 57 விவசாயிகளுக்கு ரூ.86.02 லட்சம் மானியத்திலும், விக்கிரவாண்டி வட்டாரத்தில், 51 பேருக்கு ரூ. 84.66 லட்சம், வானூர் வட்டாரத்தில் 44 பேருக்கு ரூ. 76.45 லட்சம், முகையூர் வட்டாரத்தில், 61 பேருக்கு ரூ.68.72 லட்சம், கண்டமங்கலம் வட்டாரத்தில் 33 பேருக்கு ரூ. 22.55 லட்சம், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில், 70 பேருக்கு ரூ. 175. 09 லட்சம் மானியத்தில் வேளாண் கருவி வழங்கப்பட்டுள்ளது.அதுபோல், மரக்காணம் வட்டாரத்தில் 73 பேருக்கு ரூ.63.98 லட்சம், மேல்மலையனூர் வட்டாரத்தில், 82 பேருக்கு ரூ.72.12 லட்சத்திலும், மயிலம் வட்டாரத்தில், 51 பேருக்கு ரூ.50.14 லட்சம், செஞ்சி வட்டாரத்தில், 58 பேருக்கு ரூ.48.82 லட்சம் மானியத்திலும், ஒலக்கூர் வட்டாரத்தில் 41 பேருக்கு ரூ.82.73 லட்சம், வல்லம் வட்டாரத்தில் 57 பேருக்கு ரூ.96.68 லட்சம் மானியம் என மொத்தம் 755 விவசாயிகளுக்கு, ரூ.10.14 கோடி மானியத்தில், வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.ரூ. 23 கோடி மதிப்பில் டிராக்டர், பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவி, சுழல் கலப்பை, தானியங்கள் அடிக்கும் கருவி, நெல் வைக்கோல் சுற்றும் கருவி, நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ