உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் லிப்ட் கேட்பது போல் பர்சை அபேஸ் செய்தவர் கைது

பைக்கில் லிப்ட் கேட்பது போல் பர்சை அபேஸ் செய்தவர் கைது

திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே லிப்ட் கேட்டு பைக் ஓட்டி வந்தவரிடம் மணி பர்சை அபேஸ் செய்து தப்பியோடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 51; கோழி தீவன டீலர். இவர் நேற்று காலை 10:30 மணியளவில் வடலுாரில் இருந்து கடலுார் சித்துார் சாலை வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுக்கப்பாளையம் கிராமம் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் ஆரோக்கியதாசை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். ஆரோக்கியதாஸ் பைக்கை நிறுத்தியதும், அவரது பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்சை எடுத்துக்கொண்டு அந்த வாலிபர் தப்பியோடினார்.ஆரோக்கியதாஸ் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் வாலிபரை துரத்திச் சென்று பிடித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், விருத்தாசலம் அடுத்த வீரசெட்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் அபிமன் தேவ், 19; என தெரியந்தது. போலீசார் வழக்குப்பதிந்து வாலிபரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை