உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

பெண்ணிடம் அத்துமீறியவர் கைது

செஞ்சி : செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கர்ணா 45: இவர் நேற்று முன் தினம் காலை பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 40 வயது பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார். பெண் கூச்சல் எழுப்பியதால் கர்ணா அந்த பெண்ணை தடியால் அடித்து விட்டு தப்பி சென்றார். இது குறித்து கேட்ட பெண்ணின் கணவரை கர்ணாவும், அவரது இரண்டு மகன்களும் திட்டி மிரட்டினர். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து கர்ணாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை