உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது  

ஆன்லைன் லாட்டரி விற்ற நபர் கைது  

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே ஆன் லைன் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோட்டக்குப்பம் போலீ சாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, சின்ன கோட்டக்குப்பம் வண்ணா ரத் தெருவை சேர்ந்த ராஜ்குமார், 37; என்பவரை பிடித்து சோதனை செய்த போது, மொபைல் போன் மூலம் ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆன்லைன் லாட்ட ரிக்கு பயன்படுத்திய இரு மொபைல் போன்கள், ஒரு பல்சர் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ