மேலும் செய்திகள்
அடகு கடை உரிமையாளர்கள் நகைகளுடன் தப்பியோட்டம்
11-Jan-2025
திருவெண்ணெய்நல்லுார்: அடகு கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தர்மராம் மகன் மாதுரம்,42; இவர், திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை 8:30 மணிக்கு கடையை திறக்க வந்தோபது, முன்பக்க ஷட்டரின் பூட்டுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
11-Jan-2025