பைக்கில் தவறி விழுந்தவர் பலி
வானுார்: கிளியனுார் அருகே பைக்கில் சென்ற கட்டட கான்ட்ராக்டர், வேகத்தடையில் தவறி விழுந்து உயிரிழந்தார். திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் சேந்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம், 49; கட்டட கான்ட்ராக்டர். நேற்று முன்தினம் கிளியனூரில் இருந்து திண்டிவனத்திற்கு பைக்கில் சென்றார். கிளியனூர் காடாங்குளம் சந்திப்பு வேகத்தடை இருப்பது தெரியாததால், வேகமாக சென்றார். வேகதடை மீது பைக் ஏறி இறங்கியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கிளியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.